3 அக்டோபர், 2010

வடக்கில் மீள்குடியேறியோரின் கட்டட பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்கள் தமது வீடுகளின் திருத்த வேலைகளுக் குத் தேவையான மணலை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்குத் தேவையான மணலை பெறுவதற்கு கண்டாவளை, தன்னங்கண்டி மற்றும் பூநகரியில் இரண்டு இடங்களும் இனங்காணப்பட்டுள்ளன.

மீளக்குடியேறும் மக்கள் தமது கட்டட தேவைக்காக மேற்படி இடங்களிலிருந்து மணலை பெற்றுக்கொள்ள முடியும்.

தமது தேவை குறித்து கிராம சேவகரின் ஊடாக தமது பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மேற்குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து மணல் பெறலாம்.

மணல் அகழும் பிரதேசங்கள் புவிச்சரித வியல் சான்றிதழ் பெற்ற சங்கங்கள் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன. மீள்குடியேறும் மக்கள் தமது வீட்டுத் தேவைக்காக பெறுவதாயின், மணல் கியூப் ஒன்றுக்கு 250 ரூபாவை மேற்படி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களாயின் கியூப் ஒன்றுக்கு 1500 ரூபாவை வழங்க வேண்டும் எனவும் தீர்மாணிக்கப் பட்டுள்ளதாகவும் அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்தார்.

எனினும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்வதாக கூறி மணல் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக