22 செப்டம்பர், 2010

தடை செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை






பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 40 குதிரை வலுவுடைய 141 மீன்பிடிப் படகுகளையும் மீனவர்களிடம் மீள ஒப்படக்க உள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நேற்று தெரிவித்தது.

பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி மீன்பிடிப்படகுகளை மீன்பிடி அமைச்சுக்கு ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

அவை மீள வழங்கப்பட்டதும் விசேட குழுவொன்றினூடாக படகுகள் மீனவர்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த காலங்களில் 40 குதிரை வலுவுள்ள மீன் பிடிப் படகுகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக