22 செப்டம்பர், 2010

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண செயலணி அமைக்க தீர்மானம்






மீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்தது.

இதனூடாக மீன்பிடித்துறை சார்ந்த பிரச்சி னைகளுக்கு தீர்வுகாணவும், தடைசெய்ய ப்பட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்பிடிப்பவர்களை கைது செய்வதற்காகவும் பதிவு செய்யாமல் மீன்பிடிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் பேச்சு இடம்பெற்றுள்ளது. இச்சமயமே செயலணி அமைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக மீன்பிடி அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இந்த செயலணிக்கு மீன்பிடி அமைச்சு, கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மற்றும் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தடை செய்யப்பட்ட உப கரணங்களை பயன்படுத்தி மீன்பிடிப்போரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக