22 செப்டம்பர், 2010

ஐ.நா. உலக உணவுத்திட்டம் வழங்கிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் வழங்கிய அரிசி மற்றும் கோதுமை மா போன்ற மக்களுக்கு வழங்கிய உணவுப்பொருட்களை விற்பனைக்காக எடுத்துச்சென்ற கிரமசேவை உத்தியோகத்தர், பலநோக்கு கூட்டுறவுசங்க முகாமையாளர், சமாதான நீதிவான் ஆகியோர் இன்று காலை வெல்லாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13ம் கொலணி, சங்கர்புரம் ஆகிய கிராமமக்களுக்கு வழங்கப்படவிருந்த உணவுப் பொருட்களே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களால் கடத்தப்பட்ட 954 கிலோ கிராம் கோதுமை மா மற்றும் 700 கிலோ அரிசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு குடும்பத்திற்கு 7.5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டிய நிலையில் 1 கிலோவையே வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன பொலிஸாரைப்பணித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக