22 செப்டம்பர், 2010

பசும்பாலில் இருந்து முதன்முறையாக ஐஸ்கிரீம்




கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை முதற்தடவையாக பசும் பால் மூலமாக தயாரிக்கப்படுகின்ற ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நிக்கவரட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் உற்பத்திக்கான (இயந்திரத்தை) தொழிற்சாலையை திறந்து வைத்தார். புதிய தொழிற் சாலையை திறந்து வைத்த கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உரையாற்றுகையில் :-

சந்தையில் காணப்படுகின்ற ஐஸ் கிரீம்களை விடவும் மலிவான விலையில் இந்த வகையிலான ஐஸ் கிரீம்களை நுகர்வோருக்கு வழங்க முடியும். தேசிய பாற்பண்ணைகளின் அபிவிருத்தியினை அதிகரித்து, நமது வளங்களை பெருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்ற கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் தமது உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நீண்ட காலமாக பாலுற்பத்தி துறையில் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் தேவைக்கேற்ப தேசிய பாலுற்பத்தியினை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தீர்க்கமான முடிவுகள் அவசியம்.

தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சிறு உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கின்ற நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவசக்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கொட்டகலையில் 151 பேருக்கு பசுக்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக