1 ஆகஸ்ட், 2010

சன் சீ’ கப்பலை இடை மறிக்க கனடிய அரசு முன் ஏற்பாடு கனடா பாதுகாப்பு அமைச்சு தகவல்


சுமார் 200 இலங்கையர்கள் இருப்பதாகக் கூறப்படும் எம். வி. சன்சீ கப்பலை இடை மறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் அடுத்த வாரமளவில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கடற் பரப்பில் பயணிப்பதை தமது கடற் படையினர் அவதானித்துள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கப்பல் கனேடிய கடற் பரப்புக்குள் பிரவேசிக்கும் போது அதனை தடுத்து நிறுத்த தமது கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கப்பலில் பயணிப்போரின் உடல் நிலையை கவனிப்பதற்கான ஒழுங்குகளையும் தமது அரசாங்கம் செய்திருப்பதாக மெக்கே தெரிவித்துள்ளார். கனடாவுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தக் கப்பலில் இலங்கையின் பெண்களும் சிறுவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத்துறை சட்டத்தரணி டக் கெனொன், இந்தக் கப்பல் பயணிகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் போது கப்பலில் பயணிப்போர் அடைக்கலம் கோரும் அகதிகளாகவே இருப்பர் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். கெனொன் கடந்த ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்த இலங்கையர்களுக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக