வடக்கு, கிழக்கு மலையகப் பகுதிகளிலுள்ள 346 பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் இனங்காணப்பட்ட 1000 பாடசாலைகள் இரண்டாம் நிலை பாடசாலைகளாக தரயமுர்த்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கென 60,000 மில்லியன் ரூபா செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளை நாடிச் செல்லும் போட்டி மனப்பான்மை மற்றும் போக்குவரத்து, போஷாக்கு என்பவற்றுடன் நெருக்கடி நிலையை போக்குதல் போன்ற முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு இந்த இரண்டாம் நிலை பாடசாலைகளை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. குறிப்பாக கிராமிய மற்றும் கஷ்டப் பிரதேச பாடசாலைகளை இலக்காகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.
ஆரம்பப் பிரிவு பாடசாலை வலையமைப்பிற்கான இரண்டாம் நிலைப் பாடசாலை என அறிமுகப் படுத்தப்படும் இப்பாடசாலை ஒவ் வொன்றும் ஒவ்வோர் மூன்று ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கும் ஒரு இரண்டாம் நிலை பாடசாலையாக தரமுயர்த் தப்படும்.
வகுப்பறையினுள் போதிய இடவசதி, க. பொ. த. சா/த மற்றும் உ/த ஆய்வுகூட வசதி, இணைய வசதிகளுடன் கூடிய கணனி ஆய்வு கூடம், நூலகம், மனையியல், விவசாய கல்வி ஆய்வுகூடம், மாணவர் விடுதி, ஆசிரியர்களுக்கான விடுதி, நீர், மின், தொலைபேசி வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்பன உள்ளடங்கியதாக இந்த இரண்டாம் நிலை பாடசாலைகள் அமையவுள்ளன.
நான்கு வருட திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் நிலை பாடசாலைகள் மேல் மாகாணத்தில் 123 அமையவுள்ளன.
மத்திய மாகாணத்தில் 153, தென் மாகாணத்தில் 110, வட மாகாணத்தில் 90, கிழக்கில் 103, வடமேல் 127, வட மத்தியில் 82, ஊவா மாகாணம் 83, சப்ரகமுவ 113 என நாடு முழுவதிலும் 1000 பாடசாலைகள் அமையவுள்ளன.
தற்போது ‘இசுறு’ பாடசாலைகள் என தரயமுர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக