கொழும்பு புறக்கோட்டை புடவைக் கடைகளுடன் தொடர்புடைய நாட்டாமை மார்களுக்கு சீருடைகளும் அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளன.
கொழும்பு புறக்கோட்டை முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெருக்கள், மெயின் வீதி, கெய்ஸர் வீதி, குமார வீதி, மெலிபன் வீதிகளிலுள்ள புடவைக் கடைகளின் தொடர்புடன் வேலை செய்யும் நாட்டாமைமார்களை இலக்காகக் கொண்டு இந்த அடையாள அட்டைகள், சீருடைகள் புறக்கோட்டை பொலிஸாருடன் இணைந்து வழங்கப்படவுள்ளதாக புறக்கோட்டை புடவை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் எம். வை. எச். நஜிமுதீன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நாட்டாலையின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், அவர் தொழில் புரியும் கடையின் பெயர் விபரம், தொழில்புரியும் பகுதி என்பன குறிப்பிடப்படவேண்டும். இதுவரை சுமார் 700 க்கும் மேற்பட்ட நாட்டாமைமார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கருஞ்சிவப்பு (மெரூன்) நிறத்திலான சீருடை வழங்கப்படவுள்ளது. நாளை 2 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நாட்டாமைமார்களுக்கான சீருடை, அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
சங்கத்தின் தலைவர் எம். வை. கே. நஜிமுதீன், செயலாளர் வை. ஆர். பி. குமார பிரேசார, பொருளாளர் கிருஷ்ணசாமி கந்தராஜா உட்பட ஏனைய வர்த்தகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக