1 ஆகஸ்ட், 2010

உலகின் மிக வேகமாக செல்லும் ரயிலை சமீபத்தில் சீனா இயக்கி, சாதனை படைத்துள்ளது.





உலகின் மிக வேகமாக செல்லும் ரயிலை சமீபத்தில் சீனா இயக்கி, சாதனை படைத்துள்ளது. இந்த ரயில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் புல்லட் ரயிலை விட வேகமானது. இதன் சராசரி வேகம் மணிக்கு 350 கி.மீ., இந்த ரயில் ஆயிரத்து 68 கி.மீ., தொலைவுள்ள மத்திய சீனாவில் வூஹானையும், தென்சீனாவில் குவாங் சோவையும் இணைக்கிறது. இதற்கு முன்பு இந்த இரண்டு நகரங்களை இணைக்கும் ரயிலில் பயணித்தால் 6 மணி நேரம் ஆகும். ஆனால், தற்போது இயக்கப்படும் அதிவேக ரயில் மூலம் இரண்டு மணி 45 நிமிட நேரத்தில் சென்று விடலாம்.

சீனாவில் விரைவு ரயில் போக்குவரத்து மத்திய சீனாவை இணைக்கும் வகையில் வளர்ச்சி குறைந்த பகுதிகள் மற்றும் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என 20 நகரங்களை கடந்து வருகிறது. சீமென், பாம்பார்டியர் மற்றும் ஆல்ஸ்டோம் ஆகிய நிறுவனங்கள் இந்த விரைவு ரயிலை வடிவமைக்கவும், அதன் பாகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. கடந்த டிசம்பரில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு, 394 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயிலின் சராசரி வேகம் 350 கி.மீ., உலகில் உள்ள மற்ற எந்த ரயிலையும் விட இது மிக வேகமாக செல்லக்கூடியது.

ஜப்பானில் மணிக்கு 243 கி.மீட்டரும், ஜெர்மனியில் 232 கி.மீட்டரும், பிரான்சில் 277 கி.மீட்டர் வேகத்திலும் தான் ஓடுகின்றன. அதிவேகமாக செல்லும் இந்த ரயிலுக்கு 380ஏ என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது. சாங்சுன் ரயில்வே வாகன நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் 380 கி.மீ., நேரத்தில் செல்லக் கூடியதென்றாலும் சிறிது வேகம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் ரயில்வே துறை அமைச்சருக்கும், சாங்சுன் ரயில்வே வாகன நிறுவனத் திற்கும் இடையே ஏற்பட்ட ஓப்பந்தப்படி அதிவேக ரயில்கள் 100 தயாரிக்கப்பட உள்ளன.

புதிய இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டப் பின் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே அடுத்த ஆண்டு முதல் இந்த அதிவேக ரயில் ஓடத் துவங்கும். பீஜிங் - ஷாங்காய் இடையே உள்ள தூரம் ஆயிரத்து 302 கி.மீட்டர். இந்த தூரத்தை அதிவேக ரயில் 4 மணி நேரத்தில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக