13 ஜூலை, 2010

2 கொலை வழக்குகளில் 4 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை துபாய் கோர்ட்டு தீர்ப்புதுபாய் நாட்டில் 2 தனித்தனி கொலை வழக்குகளில் 4 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குமார் என்ற தொழில் அதிபர் தன்னிடம் வேலை பார்த்து, பின்னர் தொழில் அதிபராக மாறிய குமில் என்பவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இந்த வழக்கில் கூலிப்படையினர் ஜகாரியா, பஷீர், அன்வர் ஆகியோருக்கு ஷார்ஜா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இந்த சம்பவத்தில் குஜாந்தில் என்பவரையும் அவர்கள் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த வழக்கில் 3 பேருக்கும் தனியாக தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தொழில் அதிபர் குமாருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனையும், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த பக்கீர் அல் தீன் மற்றும் அப்துல் மஜீத் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இன்னொரு வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.எஸ். என்பவருக்கு ஷார்ஜா ஷரியா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. கூலித் தொழிலாளியான இவர் தன்னுடன் தங்கி இருந்த இன்னொரு தொழிலாளியை, வாய்த் தகராறில் ஆத்திரமடைந்து அடித்து கொலை செய்ததாக போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக