13 ஜூலை, 2010

ஆஸி. செனட் சபைத் தேர்தலில் யாழ். பெண் போட்டி

அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் இலங்கைப் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார்.

கிறீன் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் இவர் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத் தமிழ் பெண்மணியாவார்.

பிராமி ஜெகன் (வயது 30) என்பவரே இவ்வாறு போட்டியிடுகின்றார். இவர் முன்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.

இவர் சிறுமியாக இருக்கும் போதே இலங்கையில் ஏற்பட்டிருந்த கலவரங்களையடுத்து குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறிவர். சோமாலியா, தன்சானியா, மலேசியா போன்ற நாடுகளில் தங்கியிருந்த இவர் இறுதியில் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தார்.

கிறீன் கட்சியின் செனட் சபை வேட்பாளராக நியமிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது,

"தமிழ்ச் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்குப் புகலிடம் பெற்றுக்கொடுப்பதே எனது அரசியல்நோக்கம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக