13 ஜூலை, 2010

ஜி.எஸ்.பி. பிளஸ் நீடிப்பு பற்றிய பேச்சுக்களில் முன்னேற்றமில்லை

இலங்கைக்கு அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எதுவித முன்னனேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை மக்களுக்கு வரிச்சலுகையின் அனுகூலங்களை கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் அரசாங்கம் ஒரு வழியை தேடுகின்ற அதேவேளை ஒன்றியம் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்த ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நிபந்தனைகள், காலக்கெடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எதையும் செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை என்று மேற்படி பேச்சவார்த்தைகளில் அமைச்சர் பீரிஸ், தெளிவாகத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஆங்கில இணயத்தளம் ஒன்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைவர் பேர்னாட் செவேஜிடம் இதபற்றி கேட்டபோது, கடந்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் பேசிய பின்னர் இதுவரை இந்த விவகாரத்தில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

வரிச்சலுகையை நீடிப்பதற்கு ஒன்றியம் விதித்த நிபந்தனைகள் இலங்கையின் இறைமையை மீறுவாக அமைந்துள்ளன என்று தெரிவித்த இலங்கை அத்தகைய நிபந்தனைகளை ஏற்றக் கொள்ள முடியாது என்று தெரிவித்ததை அடுத்து, அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஒன்றியத்தின் நிபந்தனைகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறுவதற்காக அமைச்சர் பீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை சந்தித்து வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் ஆக்கபூர்வமான யோசனைகளை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை தக்கவைத்து கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில, புதிய யோசனைகள் எதையாவது ஒன்றியம் பரிசீலனை செய்கிறதா என்று செவேஜிடம் கேட்டபோது அதுபற்றி தாம் எதுவுத் கேள்விப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக