23 ஜூன், 2010

கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது : தமிழக கவர்னர் உரை

கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது. நானும் தமிழ் மொழியைத் தற்போது பயின்று வருகின்றேன். தமிழ் மொழி இலங்கை மற்றும் மலேசியாவின் அலுவலக மொழியாக இருக்கின்றது. மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது என்று தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று கோவையில் கோலாகலமாக ஆரம்பமானது. இன்று காலை 10 .30 மணி அளவில் கொடிசியா அரங்கில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் மாநாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அதன்போது, தமிழகக் கவர்னர் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பெற்றுக் கொண்டார்.

அதனையடுத்து உரை நிகழ்த்திய பர்னாலா மேலும் கூறுகையில்,

"இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் வேறு கலைஞர் வேறு அல்ல.கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது.

நானும் தமிழ் மொழியைப் பயின்று வருகின்றேன். தமிழ் மொழி இலங்கை மற்றும் மலேசியாவின் அலுவல் மொழியாக இருக்கின்றது.மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.

கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவை தமிழ் மொழியின் ஆபரணங்கள். இந்த விழாவை ஏற்பாடு செய்த முதலமைச்சர் கலைஞரை மனமார பாராட்டுகிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழி வளர்ச்சிக்கு மென்மேலும் உதவும். முதலாவது 'கலைஞர் செம்மொழி விருது' பெறும் அஸ்கோ பர்போலோவுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக