23 ஜூன், 2010

இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் இருந்து அவசரமாக சென்ற பீரிஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவசரக் கூட்டமொன்றில் பங்ககேற்கச் செல்வதாகத் தெரிவித்து நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றிலிருந்து இடை நடுவில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புறப்பட்டுச் சென்றார். ஆனால் எதற்காக செல்வதென அவர் விபரித்துக் கூறவில்லை.

அதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு நீடிக்க வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் எழுத்துமூல உறுதிப்பாட்டை ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக தர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பதிலை எதிர்பார்த்துச் சென்ற ஊடகவியலாளர்கள் பதிலெதனையும் பெறாத நிலையில் திரும்ப நேர்ந்தது.

நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வுடன் பத்திரிகையாளர் மாநாடும் இடம்பெறும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான அறிக்கை வந்ததால் அது குறித்து அரசாங்கத்திடம் இருந்து தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள முடியும் என எண்ணியிருந்த நிலையில் நேற்றைய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு மட்டுமே இடம்பெறும் என்றும் பத்திரிகையாளர் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றுக் காலை அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக