23 ஜூன், 2010

சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற 155 பேர் வவுனியாவில் கண்டுபிடிப்பு குற்றத்தை ஒப்புக் கொண்ட 70 பேருக்கு அபராதம்


வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச் சாட்டுத் தொடர்பாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டவர்களில் எழுபது (70) பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஒவ்வொருவ ருக்கும் தலா பத்தாயிரம் ரூபா படி வவு னியா மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா அபராதம் விதித்தார்.

சட்ட விரோதமாக மின்சாரம் பெறுபவர்களை கைது செய்யும் விஷேட நடவடிக்கை ஞாயிறன்று மேற்கொண்டது. இந் நடவடிக்கையின் போது 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மாவட்ட நீதமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பான வழக்கு நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டது. இச் சமயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவர்களில் 70 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இதேநேரம் ஏனைய 85 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றத்தில் நடைபெறுமென நீதிமன்ற பதிவாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக