23 ஜூன், 2010

ஜீ.எஸ்.பியை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை



மனித உரிமை பாதுகாக்கப்படுமென இலங்கை உறுதியளிக்குமாயின் மாத்திரமே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீடிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக அதன் இலங்கை பிரதிநிதி மடுல்ல தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நீடிக்க இலங்கை அரசாங்கம் நிபந்தனைகள் எதிலும் கைசாத்திடத் தேவையில்லையென மடுல்ல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதாக தமக்கு உறுதியளித்தால் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மேலும் நீடிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக மடுல்ல விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்த காலத்தின் போது, மனித உரிமைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்தது.

இதனையடுத்து இலங்கைப் பிரதிநிதிகள் ஐரோப்பா சென்று ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் விளைவாக இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக