17 மே, 2010

அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது






பாலசோர்: எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது.

ஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.



உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.



காரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக