17 மே, 2010

பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜதேக கோரிக்கை



இராணுவத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணி மீண்டும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை குறிக்கும் முகமாக நாளை மாலை விசேட பூஜை வழிபாடு ஒன்றை நடத்தப் போவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

யுத்த வெற்றியின் காரணகர்த்தாவான தமது கணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமைக் காரியாலய வளவினுள்ளேயே இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளை தாம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை காலத்தின் கோலமே என்று ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

தினமும், இந்த தடுப்புக் காவல் நிலையத்திற்கு இரண்டு தடவைகள் சென்று தமது கணவரைப் பார்வையிடும் போதெல்லாம் இந்த ஒத்திகைகளை தாம் காண்பதாக திருமதி பொன்சேகா தெரிவித்தார்.

எவ்வாறாயினும, இந்த கொடிய யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தமது கணவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக