17 மே, 2010

தந்தை & மகனை சேர்த்து வைத்த பேஸ்புக்

லண்டன் : இங்கிலாந்தில் 37 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற தந்தையை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்து சேர்ந்தார் மகன்.
லண்டனை சேர்ந்தஆன்டி ஸ்பியர்ஸ் (39) 2 வயது குழந்தையாக இருந்தபோது, தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று விட்டார். வளர்ந்த பிறகு தந்தையைப் பற்றி தாயிடம் விசாரித்தார் ஆன்டி. தந்தையின் பெயர் ‘கிரகாம் கோர்பெட்’ என்று சொல்லி வைத்தார் தாய்.
ஆண்டி சமீபத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் தனது பக்கத்தை உருவாக்கி, அதில் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார். தந்தையைத் தேடுவதாக கூறி ‘கிரகாம் கோர்பெட்’ என்று டைப் செய்தார். லண்டனில் வசிக்கும் ஏகப்பட்ட கோர்பெட்களின் பெயர்களை படத்துடன் இணைய தளம் வெளியிட்டது.
அதில் தனது சாயலில்(!) இருந்த தந்தையைத் தேடிப் பிடித்து விட்டார் ஆன்டி. உடனடியாக ஒரு இமெயில் அனுப்பினார். 2 நாட்களில் ‘ஹலோ சன்!’ என்று பதில் வர 37 ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு தந்தை &மகன் இணைந்தனர். இதுபற்றி ஆன்டி கூறியதாவது:
எனது தந்தை பெயரில் 15 பேரின் படங்கள் இருந்தன. அதில் ஒன்றைப் பார்த்ததும் இவர்தான் என் தந்தை என்று இதயம் சொன்னது. எனது வயதான படத்தைப் பார்ப்பது போல இருந்தது அது. உடனே, இமெயில் அனுப்பினேன். 2 நாட்களில் பதில் வந்தது. முகவரியை பார்த்து என்னைக் காண வந்தார் தந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக