17 மே, 2010

திருமலை தாழமுக்கமே தொடர் மழைக்கு இதுவே காரணம் :வளிமண்டல திணைக்களம்



தென் மேல் பருவப் பெயர்ச்சி, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் கொண்டுள்ள தாழமுக்கம் என்பனவற்றால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி சின்னையா வசந்தகுமார் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலங்களில், கொழும்பு மாவட்டத்தில் 53.2 மில்லிமீற்றர், கட்டுநாயக்க 94.5 மி.மீ., ரத்மலானை 120.0 மி.மீ., இரத்தினபுரி 128.8 மி.மீ., மீகொடை 173.2 மி.மீ., கம்பஹா மஹாவிற்ற 232.0 மி.மீ., கம்பஹா உயிரியல் பூங்கா 283.0 மி.மீ., நிட்டம்புவ 313.6 மி.மீ., தெஹிவளை 168.0 மி.மீ., அங்வெல 210.0 மி.மீ. என்றவாறு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடரும் கால நிலை மாற்றத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்,

அதேவேளை, இடி, மின்னலின் போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக