8 டிசம்பர், 2010

ஆணாக மாறிய பெண் - மாத்தறையில் வித்தியாசமான வழக்கு

தன்னை ஓர் ஆண் எனக் கூறி மற்றுமொரு யுவதியை திருமணம் முடித்த பெண் ஒருவரை மாத்தறை நீதவான் நீதிமன்றம் 5ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

திக்வெல்ல, அழுத்கொடை நிரோசா பிரியங்கா என்ற பெண் (வயது 32) வனிகசிங்க சாரங்க குமார என்ற போலியான ஆணினது பெயரில் மாத்தறை தெவிநுவரை என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயது யுவதி ஒருவரை திருமணம் செய்தாக பொலீஸார் வழக்குத்தாக்கல் செய்தனர். இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னை ஆண் எனக்கூறி யுவதி ஒருவரை திருமுணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் இராணுவத்தில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். ஆணாக நடிப்பவர் ஒரு பெண் என பொலிஸார் உறுதியாக நீதிமன்றுக்குக் கூறினர். இதையடுத்து முறைப்பாட்டை விசாரித்த மத்தறை நீதவான் உதேஷ் ரனதுங்க மேற்படி சம்பவத்துடன் தொடர் புடையவரை மாத்தறை மாவட்ட வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி முன் நிறுத்தி சம்பந்தப் பட்டவர் ஆணா? பெண்ணா? எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாத்தறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சந்தேக நபர் ஒரு பெண் என உறுதிப் படுத்தப்பட்டது. சந்தேக நபரை 5000 ரூபா பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக