அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசிய ஆவணங் களை இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவுனர் யூலியன் அசான்ஞ்ச் பிரித்தானியப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார்.
பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் யூலியன் அசான்ஞ் சைக் கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றிய பிடியாணைக்கு அமைவாக யூலியனை நேற்று ஜீ. எம். ரி. நேரப்படி 9.30 மணிக்கு (இலங்கை 3 மணி) அவரைக் கைது செய்ததாக பிரித்தானியப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 39 வயதுடைய யூலியன் அசான்ஞ்ச் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தமக்கிடையில் பகிர்ந்துகொண்ட முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் எனும் இணையத்தளத்தின் மூலம் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனால் உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் அவரைக் கைது செய்யுமாறு சுவீடன் உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்காவின் ஈராக்குக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் பரிமாறப்பட்ட இரகசியமான ஆவணங்கள், தகவல்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இலங்கை தொடர்பிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக