பாடசாலை மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தேசிய நிகழ்வு இன்று (08) புதன்கிழமை காலை திருகோணமலையில் நடைபெறுகிறது.
மூவாயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான 36 மில்லியன் பாடப்புத்தகங்கள் இன்று விநியோகிக்கப்படு கின்றன. திருகோணமலை, ஒரிஸ்ஹில் விவேகானந்தா வித்தியாலயத்தில் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது. இந் நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமை தாங்குகிறார்.
இந்தத் தேசிய நிகழ்வையொட்டி மாகாண முதலமைச்சர்களின் பங்கேற்புடன், பாட நூல் விநியோக நிகழ்வு மாகாண மட்டத்திலும் நடைபெறுவதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். பாடப் புத்தகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திய மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக