"கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற வெளி விவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கும் பெரிய பிரித்தானியாவில் அவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன அந்த சவால்களை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி பயணித்தார்.
ஜனாதிபதியை கைது செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. சவாலை ஏற்றுக் கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அவர் 50 சதத்திற்கு கூட கணக்கில் எடுக்கவில்லை. அச்சுறுத்தலுக்கு இனங்காத சிறைச்சாலைக்கு செல்வதற்கும் தயாரான துணிச்சல் மிக்க தலைவர் அவராவார்.
புலிகள் பெரும் தொகையை செலவழித்து பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்திரளான புலி ஆதரவாளர்களை திரட்டுவதற்கு முயற்சித்தனர். எனினும் அங்கு 600 பேர் மட்டுமே இருந்தனர். அதில் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை என் கண்ணால் நான் கண்டேன் அதில் பல பின்னணி இருக்கின்றது. போக வேண்டாம் என ஜனாதிபதிக்கு பலரும் ஆலோசனை வழங்கினர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதயாத்திரைக்கும் அஞ்சி ஓடுபவன் நாள் அல்ல என்று தெரிந்து கொண்டே தீர்மானத்தை எடுத்தார்.
யார் வெற்றி, யார் தோல்வி என்று பார்க்க முடியாது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழக சங்கத்தின் கடிதத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அழைப்பிதழை வாபஸ் பெற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தியே ஜனாதிபதியின் உரையை இடை நிறுத்தினர். தனது நிலைப்பாட்டை உலகிற்கே கூறுவேன் என்று கூறிய நாட்டு தலைவர் என்று பெருமைப்பட வேண்டும். புலிகள் தாலாட்டுகின்றனர். இது முழுமையான துரோகத்தனமான நடவடிக்கையாகும். சவாலுக்கு அஞ்சி வீட்டில் ஒளிந்திருந்தால் ஜனாதிபதியால் எந்தவொரு நாட்டிற்கும் செல்ல முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக