8 டிசம்பர், 2010

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் கட்டியெழுப்பியுள்ள சமாதானம் சொந்தம்:ஜனாதிபதி



நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சிங்களம், தமிழ் ஆங்கிலமொழியை கற்பிக்கும் மும்மொழி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றி பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வின் மிகப்பெரிய அங்கமாகும். அத்துடன் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புகின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் தற்போது கட்டியெழுப்பியுள்ள சமாதானமானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் சொந்தமாகும்.

அந்த சமாதானத்தை பேண ஒத்துழைப்பு வழங்குவது சமாதானத்தை மதிக்கின்ற ஒருவரின் கடமையாகும். சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இலங்கை தொடர்பில் உண்மையை சர்வதேசத்துக்கு கூறவேண்டும். உண்மைக்காக அர்ப்பணிக்காதவர்களினால் சமாதானத்தையோ சுதந்திரத்தையோ வெற்றிக்கொள்ள முடியாது. தாம் பிறந்த நாட்டின் மக்களுக்கு அன்பு செலுத்தாத ஒருவரினால் உலகத்துக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிசுத்த பாப்பரசரினால் கர்தினாலாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் வண. பிதாவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது:

இலங்கை கத்தோலிக்க மக்களுக்கு இந்த யுகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஒருபக்கம் இது இயேசுவின் பிறப்பை கொண்டாடும் காலமாகும். அதேபோன்று மூன்று தசாப்தங்களாக கத்தோலிக்க மக்கள் எதிர்பாத்திருந்த சமாதானம் அடையப்பட்டுள்ள காலமாகும். அத்துடன் ஆசியாவுக்கு கிடைத்த ஒரேயோரு கர்தினால் பதவி இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது. அது இந்நாட்டின் கத்தோலிக்க மக்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்பதுடன் பாரிய வெற்றி என்று நான் கருதுகின்றேன்.

அர்ப்பணிப்பு

மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட அர்ப்பணிப்பு மற்றும் சேவை காரணமாகவே அவர் கர்தினாலாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார் என்பதனை நாம் விவாதமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். மல்கம் ரஞ்சித் ஆண்டகை சிறு வயது முதலே சமய வாழ்க்கையில் ஆழமாக ஈடுபட்ட ஒருவராவார். சிறு வயது முதல் சமய வாழ்வின் புனித தன்மையை கண்டுவந்த அவர் சமய கல்வியை பெற்ற காலத்தில் படிப்படியாக சமய வாழ்வின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகின்றோம்.

மல்கம் ரஞ்சித் ஆண்டகையான உங்களிடம் நாங்கள் கண்ட பல்வேறு சிறந்த குணாம்சங்கள் உள்ளன. எந்த இடத்திலும் சேவைக்காக உங்களை அர்ப்பனித்தவர் நீங்கள். நீங்கள் களுத்துறை பகுதிக்கு பொறுப்பாக இருந்தபோது சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் அம்மக்களுக்கு செய்த சேவை வழங்கிய பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப மேற்கொண்ட உதவியை அந்த மக்கள் இன்றும் நினைவுகூறுகின்றனர்.

பிரபலத்துக்காக செய்யவில்லை

நீங்கள் இரத்தினபுரியில் இருந்த காலத்தில் கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்தீர்கள். குடிசையில் வாழும் மக்கள் குடிசையிலேயே வாழவேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவ்வாறான மக்கள் மாடி வீடு அல்லது வேறு வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று நீங்கள் கருதினீர்கள். யாருடையதும் பாராட்டுக்காகவோ பிரபலத்துக்காகவோ நீங்கள் இதனை செய்யவில்லை. நீங்கள் இந்நாட்டின் சிறுவர் சந்ததியினருக்காக செய்த சேவையானது நாங்கள் உங்களின் குணாம்சத்தை மதிக்கின்ற மற்றுமொரு விடயமாகும். செத் சரண என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்து இன மத பேதமின்றி பிள்ளைகளின் கல்வியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தீர்கள். மனிதனுக்கு கிடைத்த மனித தன்மையை அபிமானத்துடன் பயன்படுத்தவே இவற்றை நீங்கள் செய்தீர்கள். மனிதத்தன்மைக்கு பொருத்தமான வகையில் மனிதத்தன்மையின் உச்ச பயனை பெறுவதற்கான வழியை காட்டிக்கொடுப்பது மத தலைவர் ஒருவரின் கடமையாகும். அடிப்படைவாதிகளாக முடியாது

வெளிநாடுகளிலும் நீங்கள் பாரிய நேர்மையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள். இந்தோனேஷியா கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளில் வத்திக்கானின் தூதுவராக கடமையாற்றியுள்ள நீங்கள் உலக கத்தோலிக்க மக்கள் மத்தியிலும் பெற்றுக்கொண்டுள்ள புகழ் தொடர்பில் நாங்கள் பெருமையடைகின்றோம். நீங்கள் அனைத்து சமயத்தவருடனும் மிகவும் சுமுகமாக செயற்படும் ஒருவர். பௌத்தராகட்டும் இயேசுவாகட்டும். வார்த்தைகளை பின்பற்றும் ஒருவர் ஒருபோதும் அடிப்படைவாதிகளாக முடியாது. தமது மதத்துக்கு கௌரவம் கிடைக்கவேண்டுமானால் ஏனைய மதங்களுக்கு கௌரவம் செலுத்தவேண்டும். இவ்வாறு மதிப்பதனால்தான் ஏனைய மதத்தினர் உங்களை மதிக்கின்றனர்.

எமது நாடு ஒருபோதும் மதக் கலவரம் மத யுத்தம் ஆகியன இருந்த நாடல்ல. சம்பிரதாயபூர்வமாகவே நாங்கள் மதங்களை மதிப்பவர்கள். எமக்கு சமய சகவாழ்வு என்பது புதிய விடயமல்ல.

தடைகளுக்கு முடிவு

சமயங்களை பின்பற்றுவதற்கு இருந்த உரிமையை பயங்கரவாதிகள் பறித்துகொண்டமையே 30 வருடங்களாக சமயங்களுக்கு இருந்த பாரிய பிரச்சினையாகும். கத்தோலிக்கர்கள் மடுவுக்கு செல்வதற்கு காணப்பட்ட தடை இந்துக்கள் கதிர்காமம் செல்ல காணப்பட்ட தடை பௌத்தவர்கள் நாகவிஹாரைக்கு செல்ல காணப்பட்ட தடை மற்றும் முஸ்லிம் மக்கள் காத்தான்குடி சமய ஸ்தானத்துக்கு செல்வதற்கான தடை என அனைத்தும் முடிந்துவிட்டன. இன்று கிழக்கிலிருந்து இந்து மக்கள் கதிர்காமம் செல்கின்றனர். தேவேந்திர முனையிலிருந்து மக்கள் மன்னார் மடு தேவாலயத்துக்கு செல்கின்றனர். பௌத்தர்கள் நாகவிஹாரைக்கு செல்கின்றனர். இதனமூலம் சமய சகவாழ்வு புலப்படுகின்றது. மடு தேவாலய பூமியில் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய பதுங்கு குழிகளை அழித்துவிட்ட அதே வேகத்தில் பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட அனைத்து தேவாலயங்களையும் புனரமைக்க ஆரம்பிக்கப்பட்டது. மும்மொழிக் கல்வி

நாம் தற்போது இந்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சிங்களம் தமிழ் ஆங்கில மொழியை கற்பிக்கும் மும்மொழி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றி பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் நாட்டில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை உங்களுக்கு தெரியும். அதற்கக்ஷிக உங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். எனவே பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வின் மிகப்பெரிய அங்கமாகும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புகின்றோம். எமது கர்தினால் ஊடாக இந்த நாட்டின் ஒற்றுமைக்கு மேற்கொள்ளப்பட்ட சேவையை எங்களால் மறக்க முடியாது.

கௌரவதத்துடன் குறிப்பிடுகின்றேன்

வத்திக்கான் அல்லது உலகில் பல நாடுகளில் சேøவாயற்றினாலும் தாய்நாடு தொடர்பில் உங்களுக்குள் சிறந்த கௌரவம் காணப்பட்டது. அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது நாட்டு மக்களிடம் காணப்பட்ட வேதனையை பற்றி உங்களுக்கு தெரியும். அவரின் குடியுரிமையை பறித்தமைக்கு எதிராக பேசிய கத்தோலிக்க குருமார்களுக்கு இடையில் நீங்களும் இருந்தமையை கௌரவதத்துடன் குறிப்பிடுகின்றேன்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் சொந்தம்

மேலும் கடந்தகாலங்களில் தாய்நாடு அசௌகரியத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் நீங்கள் வழங்கிய சேவையை மதிக்கின்றோம். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த நீங்கள் வழங்கிய சேவை பாராட்டுக்குரியது. நாம் தற்போது கட்டியெழுப்பியுள்ள சமாதானமானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் சொந்தமாகும். அந்த சமாதானத்தை பேண ஒத்துழைப்பு வழங்குவது சமாதானத்தை மதிக்கின்ற ஒருவரின் கடமையாகும். சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இலங்கை தொடர்பில் உண்மையை சர்வதேசத்துக்கு கூறவேண்டும். உண்மைக்காக அர்ப்பணிக்காதவர்களினால் சமாதானத்தையோ சுதந்திரத்தையோ வெற்றிக்கொள்ள முடியாது. தாம் பிறந்த நாட்டின் மக்களுக்கு அன்பு செலுத்தாத ஒருவரினால் உலகத்துக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியாது.

அன்பும் இரக்கமும் இருக்கின்றது

நான் ஒரு பௌத்தன். நீங்கள் ஒரு சிரேஷ்ட கத்தோலிக்க மதகுரு. உங்களைப்பற்றி பாரிய கௌரவம் உள்ளது. உங்களுக்குள் என்னைப்பற்றி அன்பும் இரக்கமும் இருக்கின்றது என்பதும் எங்களுக்கு தெரியும். எமக்கிடையில் காணப்படுகின்ற இந்த நட்பு பௌத்த இந்து கத்தோலிக்க இஸ்லாம் மக்கள் மத்தியிலும் காணப்படவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக