திருகோணமலை மாவட்டத்தின் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் தற் போது துரிதமாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே யினால் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக ‘நாரா’ நிறுவனத்தின் அனுசரணை யுடன் 7500 மீன் குஞ்சுகள் விடப் பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கல்மெட்டியாவ குளம், இத்திக் குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய குளங்களில் இந் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கி ன்றது.
இலங்கையை கடற்தொழில் துறையை மாத்திரமின்றி நன்னீர் மீன்பிடித் துறையிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டி ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்ற நாமும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக