ஹவானா: கியூபாவில் நடந்த விமான விபத்தில், 68 பேர் பலியாகியுள்ளனர். கியூபா நாட்டுக்குச் சொந்தமான விமானம் ஒன்று சாண்டியாகோ நகரிலிருந்து தலைநகர் ஹவானாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 28 வெளிநாட்டினர், 7 விமான ஊழிர்கள் உள்பட 68 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் சில நிமிடங்களில் நடுவழியில் கட்டுப்பட்டை இழுந்து நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். போலீசாரும், மீட்புப் படையினரும், மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், அமெரிக்க எண்ணை நிறுவனத்தில் பணிபுரியும் 19 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, தனியார் வாடகை விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில், இருந்த இரண்டு இன்ஜின்களில் ஒன்று பழுதானது. இதனால், உடனடியாக தரையிறக்க முயன்றபோது, அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 19 தொழிலாளர்கள், 2 விமான ஊழியர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டினர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
6 நவம்பர், 2010
கியூபாவில் விமான விபத்து: 68 பேர் பலி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக