உகண்டா, கம்பால
வில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் இலங்கையர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றிய கம்பாலாவில் கடமை புரிந்த ராமராஜா கிருஷ்ணா என்பவரே சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ஜயந்த திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
ராமராஜாவின் குடும்பத்தினர் இலங்கையில் இருப்பதாகவும், இத்தாக்குதல் சோமாலிய அரசாங்கத்துக்கு எதிராகச் சண்டையிடும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும் அவர் மேற்கொண்டு கூறினார்.
உகண்டாவில் நடந்த இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, இரு இடங்களில் நடந்த இக்குண்டு வெடிப்பில் எத்தியோப்பியர்கள், இந்தியர்கள் மற்றும் கொங்கோலியர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்
வில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் இலங்கையர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.அங்கு பணியாற்றிய கம்பாலாவில் கடமை புரிந்த ராமராஜா கிருஷ்ணா என்பவரே சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ஜயந்த திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
ராமராஜாவின் குடும்பத்தினர் இலங்கையில் இருப்பதாகவும், இத்தாக்குதல் சோமாலிய அரசாங்கத்துக்கு எதிராகச் சண்டையிடும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும் அவர் மேற்கொண்டு கூறினார்.
உகண்டாவில் நடந்த இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, இரு இடங்களில் நடந்த இக்குண்டு வெடிப்பில் எத்தியோப்பியர்கள், இந்தியர்கள் மற்றும் கொங்கோலியர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக