1 மார்ச், 2010

. . தமிழ்க் காங்கிரஸ் இடைக்கால தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போல் நியமனம்:கஜேந்திரகுமார்



அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த மாதம் 21 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தலைவர் என்ற வகையில் ராஜினாமாக் கடிதத்தை எனக்கு சமர்ப்பித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், யாப்புக்கு அமைவாக உப தலைவர் பிரான்சிஸ் வின்சன் டி போல் தலைமையில் இடம்பெற்றது.

செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏகமனதாக அவருடைய ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொண்டதுடன் கட்சியில் இருந்து விலக்குவது என்ற முடிவையும் மேற் கொண்டுள்ளார்கள்.

அடுத்து பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும்வரை இடைக்காலத் தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போலைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக