தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது -அரசாங்கம்
தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
போராளிகளை விடுதலை செய்யும் படி சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
தற்போது 10 732 பேர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரணசிங்க இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுவிக்கப்படுவர் என்றும் இதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே ஏற்கனவே 14,000 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்த அரசாங்கம் தற்போது 10 732 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் எஞ்சியவர்களுக்கு என்ன நடந்தது என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக