1 மார்ச், 2010

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த அரசு முடிவு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தொடர்பாக தற்போது உள்ள சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவுமே இவ்வாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மேலும் கூறினார்.

இவ்வாறான சட்டத் திருத்தங்களை முன்மொழிவதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு அதன் சிபாரிசுகளை ஏற்கனவே கையளித்து விட்டதாகவும் இது பற்றி விரைவில் கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

குறிப்பிட்ட சிபாரிசுகள் சட்ட மாஅதிபருக்கு அவரது ஆலோசனையை பொறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக