2 மார்ச், 2010

தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது
எஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்



பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது. போர்ச் சூழல் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியே ற்றப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமானதோடு மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். இந்த மாதத்திலும் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு, அவர்கள் வசித்த இடங்களில் உள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்க ப்படுவதாகவும் அந்த உயரதிகாரி கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவ டைந்து வருவதோடு, ஏனைய பகுதிகளிலும் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. மிதிவெடி அற்றப்படும் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் அப்பகுதிகளில் மக்கள் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வருவதோடு, எதிர்வரும் வாரங்களில் -9 வீதியின் கிழக்கு பகுதியில் மீள்குடி யேற்றங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட த்தில் அடுத்த மாத முதற்பகுதியில் மக்கள் மீள்குடி யேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மக்கள் மீள்குடியேற்றும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவோ தாமதிக்க ப்படவோ மாட்டாது என அமைச்சு குறிப்பிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக