2 மார்ச், 2010


பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்



தென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிலியில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் மற்றும் இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் பீதி அடங்குவதற்குள் இன்று பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்ஜிஸ்தான் நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள காகயன், இசபெல்லா ஆகிய பகுதிகளில் காலை 7 மணியளவில் பூமி அதிர்ந்தது. இதில் வீடுகள் சில வினாடிகள் குலுங்கின. நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததும் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்.

நில நடக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதில் சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான கிர்கிஸ்தானில் இன்று காலை 7.25 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரமான பிஷ்கேக்கிலி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.

அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சிறிது நேரம் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
1 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக