2 மார்ச், 2010

நளினி வழக்கு:
மேலும் வாய்தா கேட்கக்கூடாது
அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு




ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி கோரிக்கை வைத்துள்ளார். இதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அரசுக்கு, நளினி வைத்த கோரிக்கையின்படி, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சிறை ஆலோசனைக்குழு சமீபத்தில் கூடியது. இந்த குழுவின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இந்த நிலையில், நளினி தாக்கல் செய்துள்ள வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நளினி தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் பதிலுக்கு வாதாடுவதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனை நீதிபதிகள் அழைத்தனர். அப்போது பி.எஸ்.ராமன், `சிறை ஆலோசனைக்குழுவின் அறிக்கை இன்னும் வந்துசேரவில்லை.

எனவே, காலஅவகாசம் தேவை' என்று கூறினார். அதைதொடர்ந்து நீதிபதிகள், `ஆலோசனைக்குழுவின் அறிக்கையை அரசு இன்னும் பெறவில்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறுகிறார். இதனால் இந்த வழக்கு வருகிற 10-ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்காக தள்ளி வைக்கப்படுகிறது. இதற்குமேலும் இந்த வழக்கில் அரசு வாய்தா கேட்கக்கூடாது' என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக