2 மார்ச், 2010

நாடெங்கும் தெங்கு உற்பத்தியாளரைப் பதிய தெங்கு ஆராய்ச்சி சபைநடவடிக்கை



நாடு முழுவதுமுள்ள தெங்கு உற்பத்தியாளர்களைப் பதிவு செய்ய தெங்கு ஆராய்ச்சி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்னை உற்பத்தியை வளம்படுத்தல், கூடிய இலாப மீட்டுதல், உற்பத்தியாளாகளுக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் தேவையான தொழில் நுட்பங்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தெங்கு ஆராய்ச்சி சபை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் நல்ல ரக தென்னை இனங்களையும் நோய்த் தொற்றுக்குத் தாக்குப் பிடிக்கும் இனங்களையும் அறிமுகம் செய்தல் முதலான பணிகளை தெங்கு ஆராய்ச்சி சபை மேற்கொள்ளவே இத்தகைய பதிவு நடவடிக்கையை சபை எடுக்கவுள்ளது.

எனவே நாடுமுழுவதிலுமுள்ள தென்னை உற்பத்தியாளர்கள், விரும்பினால், தெங்கு ஆராய்ச்சி சபை, பண்டிருப்புவ தோட்டம், லுனுவில என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஈமெயில் முகவரி, தெங்குச் செய்கை பற்றிய விபரம், அல்லது தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகள் பற்றிய விபரங்களையும் இவர்கள் இந்த முகவரிக்கு அனுப்ப முடியும் என் சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக