பாடசாலை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் பாடசாலைக் கட்டடம் சரிந்து விழுந்தது. தெய்வாதீனமாக மாணவர்களுக்கு ஏற்படவிருந்த பாரிய விபரீதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
கிழக்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய வளாகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் நற்பிட்டிமுனை கரையோரத்தில் வசித்த மக்கள் இப்பாடசாலை மாடிக் கட்ட டங்களில் தங்கியிருந்தனர். அதனால் இப்பாடசாலைக்கு மேலும் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வெள்ளம் காரணமாக நூறு அடி நீளமான சுற்றுமதில் முற்றாக சரிந்து ள்ளது.
பாடசாலை வளாகத்தில் நீர் தேங்கி நின்றதனால் 1934 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த கட்டடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது. பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு செல்வதற்கு சற்று முன்னர் இடிந்து விழுந்ததனால் பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ. கையூம் தெரிவித்தார்.
கிழக்கில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்துக்கு இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டடம் தவிர்த்து 4 இலட்சத்து 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக