5 பிப்ரவரி, 2011

மீட்புப் பணிகளில் கடற்படை படகுகள், ஹெலிகொப்டர்கள் மீட்டெடுத்த கர்ப்பிணி ஹெலியினுள் பிரசவம்








வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற் கொள்ளவென கடற்படையின் 24 உயிர் பாதுகாப்புப் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய பகுதி களுக்கு இந்தக் குழுக்கள் அனு ப்பி வைக்கப்பட்டுள்ள தோடு, மேலும் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார்.

இதேவேளை, விமானப் படை ஹெலி கொப்டர்களும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்போது மீட்கப்பட்ட பெண்ணொருவர் ஹெலிகொப்டரில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். நேற்றுக்காலை 212 ஹெலிகொப்டரிலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தாயையும் குழந்தையையும் அனுராதபுரம் வைத்தியசாலையில் விமானப் படையினர் அனுமதித்தனர்.

பொலன்னறுவை பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களில் கர்ப்பிணிப் பெண்களையும் நோயாளர்களையும் ஹெலிகொப்டரில் விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். கடற்படை படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் விமானப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானப் படையினரின் நான்கு ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணாயக்கார தெரிவித்தார்.

பெல் – 212 2 ஹெலிகொப்டர்களும், எம். . – 17 இரண்டு ஹெலிகொப்டர்களும் அனுராதபுரம் மாவட்டத்தில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதுடன், ஒரு ஹெலிகொப்டர் உலருணவு, சமைத்த உணவு விநியோகத்தில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் ஜனக நாணாயக்கார தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக