5 பிப்ரவரி, 2011

தத்தளித்தோரை மீட்டு வரும்போது படகு கவிழ்ந்து விபத்து கடற்படை வீரர் உட்பட ஐவர் மாயம் கந்தளாய் சிற்றாறில் சம்பவம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த வர்களை மீட்டு வரும் பொழுது படகு கவிழ்ந்ததில் கடற் படை வீரர் ஒருவர் உட்பட ஐந்து பேர் காணாமற் போயுள்ளனர்.

கந்தளாய் சிற்றாறு பகுதியில் நேற்று முன்தினமிரவு 11.30 மணி அளவில் இடம்பெற்றதாகவும் காணா மற் போனவர்களைத் தேடி வருவதாகவும் கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார். கந்தளாய் சிற்றாறு பாலத்தில் வெள்ளத்தில் சிக்குண்டு 16 பேர் தத்தளித்துக் கொண்டிருப்பதாக இரவு 11 மணியளவில் கடற் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மூன்று கடற் படை வீரர்களும் நான்கு இராணுவ வீரர்களும் ‘டிங்கி’ப் படகில் சென்று அவர்களை மீட்டு வந்துள்ளனர். வரும் வழியில் வெள்ளப் பெருக்கு அதிகமானதால் படகு கவிழ்ந்துள்ளது. உடனடியாக 12 பேரை படையினர் காப்பாற்றியுள்ளனர். ஆனால், ஓர் ஆணும், பெண்ணும் இரண்டு குழந்தைகளும், கடற் படையின் மாலுமி ஒருவருமாக ஐந்து பேர் காணாமற் போய்விட்டதாக கமாண்டர் கோசல தெரிவித்தார்.

இந்தச் செய்தி நேற்று எழுதப்படும் வரை காணாமற் போனவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக