25 டிசம்பர், 2010

தேசிய பாதுகாப்பு தினம் நாளை யாழ்ப்பாணத்தில் முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரு நிமிட மெளன அஞ்சலி


தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் பிரதமர் தலைமையில் நாளை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை 9.25 முதல் 9.27 மணி வரை அனைவரையும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண அமைச்ச மஹிந்த அமரவீர பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக்கள், வீடு, இருப்பிடங்களை இழந்தனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வருடம் நாம் யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு தினத்தை ஏற்பாடு செய்துள்ளோம். 30 வருடகால பயங்கர யுத்தம் நிறைவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் நாட்டை பயங்கரவாத யுத்தத்தில் இருந்து காப்பாற்றிய இராணுவ வீரர்களையும், சுனாமியால் இறந்தவர்களையும் நினைவு கூரும் நோக்கிலேயே இவ்வருடம் வடக்கில் நடைபெறுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 பெளத்தாலோக மாவத்தை யில் வளி மண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டும் உரையாற்றுப் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. எமது அமைச்சின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். உலர் உணவுப் பொருட் களையும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகளை பெற்றுக்கொடுத்தோம்.

அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் மூலம் எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிவகைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 மில்லியன் வரை நாம் செலவு செய்துள்ளோம்.

சகல மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் பிரதேச செயலகங்களினூடாக செயற்படு கின்றது. இதன் மூலம் அனர்த்தம் ஏற்படு வதற்கான அறிகுறிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் முகமாக சகல அனர்த்த எச்சரிக்கை மத்திய நிலையங்களை நிறுவுவ தற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அவ்வாறே எமது அமைச்சிற்கு யு.என்.டி.பி. உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற சுமார் எட்டரை கோடி ரூபாவை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக