25 டிசம்பர், 2010

வன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளேன் பாதுகாப்பு செயலர்

“நான் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நாட்டில் நிலவி வந்த வன்முறைகளை பெருமளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறேன்" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல் நடைபெற்ற உடன் குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்று தான் விடுத்த உத்தரவு இன்று கையில் வெற்றி கண்டு வருகிறது என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இனிமேல், வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உலகின் பலம் வாய்ந்த இயக்கமான எல்.ரி.ரி யினர் மிகவும் சாதுரியமான முறையில் எவருக்கும் பிடிபடாமல் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தவறுதலாக விட்டுச் செல்லும் சிறு தடயங்களை வைத்து நாம் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

எனவே, இலட்சக்கணக்கான ரூபாவை கப்பப் பணமாக மிரட்டி பெற்று ஆட்களை கடத்தும் கோஷ்டியினர் இராணுவம் அல்லது பொலிஸ்

உத்தியோகத்தரின் சீருடைகளுடன் ஆயுதங்களை தாங்கிக் கொண்டுவந்து வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை அபகரித்து செல்வதுண்டு. இதற்கு எனது பணிப்புரையின் கீழ் பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்துள்ளார்கள். எனவே, இனிமேல் இத்தகைய குற்றச் செயல்களில் பொலிஸார் மற்றும் இராணுவ சீருடையில் வந்து எவராவது கப்பம் கேட்பார்களேயானால், அது பற்றிய தகவல்களை உடனடியாக எனக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டில் கொள்ளை, ஆட்கடத்தல், பணம் அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மேலும், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, பாரா ளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் வர்த்தக பிரமுகர் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோரின் ஆலோசனைக்கமைய அகில இலங்கை நகை வியாபார சங்கத்தினர் இதுபோன்ற முறைப் பாடுகளை பாதுகாப்பு செயலா ளரிடம் முன்வைத்தனர். பல கொள் ளைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து பல வர்த்தகர்களுக்கு இன்று நிம்மதியான வாழ்க்கையை பெற் றுக்கொடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் இந்த பொதுச் சேவையைப் பாராட்டும் முகமாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவம் செலுத்தினர். ரவி ஜூவலர்ஸ், தேவி ஜூவலர்ஸ் ஆகிய நகைக்கடை உரிமையாளர்கள் தலா 10 இலட்சம் ரூபாவை ‘நமக்காக நாம்’ என்ற நாட்டுக்காக கடுமையாக போர் முனையில் சேவையாற்றிய ஆயுதப் படை வீரரின் நிதிக்கு அன்பளிப் பாக வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக