இந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் சேவை கூட்டுத்தாபனம் (எஸ்.சி.ஐ) நிறுவனம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட் டுள்ளது. இதற்கான கேள்வி மனுக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் இரு நாடுகளிடையே கப்பல் போக்கு வரத்து தொடங்க உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இந்த சேவை தொடங்கப்படுகிறது.
இதன்படி, தூத்துக்குடி துறை முகத்திலிருந்து தலைநகர் கொழும்புக்கு கப்பல் சேவையை நடத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து கேள்வி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இரு நாடுகளிடையே கப்பல் போக்குவரத்து நடந்த பல நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் கப்பல் சேவைக்கு இம்மாத தொடக்கத்தில் இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இரு நாடு களிடையிலான பயணிகள் போக்குவரத்து குறித்து இந்தியா, இலங்கை இடையே வெகு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ்
குப்தா, இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலர் ஆகியோர் இணைந்து ஒப்பந்த வழிமுறைகளை ஆராய்வர்.
இது தொடர்பாக அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதேவேளை தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவை தொடங்கப்பட்டு ஆறு மாத இடைவெளியில் இராமேஸ் வரம்- தலைமன்னார் கப்பல் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக