கொழும்புக்கும் இந்தியாவின் தூத்துக் குடிக்கும் இடையிலான கப்பல் சேவை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக் கப்படும் என்றும் இக்கப்பல் சேவையை நடத்த தனியார் முகவர் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் இந்திய மத்திய கப்பற்துறை அமைச் சர் ஜீ. கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை இந்திய மத் திய அமைச்சரவை ஏற்கனவே வழங்கி யிருக்கும் நிலையில் வெகுவிரைவில் இக் கப்பற்சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பற்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரா யும் முக்கிய கூட்டமொன்று கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், மேற்கொள் ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆராயப்பட்டதாகத் தெரியவருகிறது. குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், இந்தியக் கடற்படையினர், கரையோரப் பாதுகாப்புப் பொலிஸார், புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கப்பல் சேவையில் பயன்படுத் தப்படவிருக்கும் கப்பல் மூலம் ஒரு தடவையில் 500 பேர் பயணிக்கமுடியும் என தூத்துக்குடி துறைமுகத்தின் தலைவர் ஜீ. ஜே. ராவ் இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார். இக்கப்பல் பயணம் 12 மணித்தியாலங்களாக இருக்குமென்றும் ஐந்து தனியார் முகவர்கள் இக்கப்பல் சேவையை நடத்த முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு-தூத்துக்குடி, தலைமன்னார்-இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்கனவே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், கப்பல் சேவைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என இந்திய கப்பற்துறை அமைச்சர் வாசன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக