21 டிசம்பர், 2010

தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த நிறுவனங்களிடமிருந்து ரூபா 160 மில். மீட்பு


மோசடி செய்யும் விநியோகத்தரை இடைநிறுத்த முடிவு

தரம் குறைந்த மருத்துவ உபக ரணங்கள் மற்றும் மருந்துப் பொரு ட்களை விநியோகித்த விநியோக நிறுவனங்களிடமிருந்து 160 மில்லி யன் ரூபாய்களை சுகாதார அமைச்சு மீட்டுள்ளது. தள்ளுபடி விலையில் விநியோகிக்கப்பட்ட 138 மருத்துவப் பொருட்கள் தொடர்பிலேயே 160 மில்லியன் ரூபாய்களை அமைச்சு மீட்டுள்ளது.

தரம் குறைந்த பொருட்களை விநியோகித்த மருந்துப் பொருள் விநியோக நிறுவனங்கள் குறித்த அறிக்கையொன்றை மருந்து விநி யோகப் பிரிவு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட 138 மருத்துவப் பொருட்கள் குறித்து சோதனை நடத்த நிபுணர்கள் குழுவொன் றையும் அமைச்சு நியமித்துள்ளது. தரம்குறைந்த 12,000 மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வருடாந்தம் மீட்கப்படுவதாக சுகா தார அமைச்சின் பேச்சாளர் தெரி வித்துள்ளார்.

இந்த நிலையில் சுகாதார அமை ச்சர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய மருந்து கள் மற்றும் மருத்துவ உபகரணங் களின் தரம் உறுதிப்படுத்தப்படுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மருந்துவில்லை தரம் மற்ற தாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அனைத்து மருந்துகளும் தடை செய்யப்படும் என அமை ச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மருந்து விநியோகஸ்தர் ஒருவர் தரமற்ற மருந்தை விநியோகித்தால் அவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவார் அல்லது நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக