21 டிசம்பர், 2010

வீடுகளில் திருடி வந்த 12 வயது சிறுவன் கைது
வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுவந்த 12 வயதுச் சிறுவன் சுன்னாகம் பொலிஸாரினால் கைது கைது செய்யப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினர் வீடுகள் உட்பட அயல் வீடுகளிலும் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து பொலிஸார் சிறுபிள்ளைகள் அணியும் தோடு மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளார்கள். தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சுன்னாகத்தில் சைக்கிள் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்க்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரிடம் இருந்து ஆறு சைக்கிள்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நபர் புத்தூரைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக