21 டிசம்பர், 2010

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்


அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தலைமையில் விநியோகம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு நிவாரண பொதிகளை நேற்று விநியோகித்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் இரணைமடு கலைமகள் வித்தியாசாலை, பூநகரி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிளிநொசசி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட் டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் பணிப்பின் பேரில் 45 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக நேற்று முன்தினம் வவுனியா மாவட்டத்தில் 109 குடும்பங்களுக்கும், நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் 998 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. தலா 4500 ரூபா பெறுமதியான நிவா ரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட விருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக