ஒருகிலோ கோழி இறைச்சியை ரூபா 350 என்ற கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதற்கு கூட்டுறவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சந்தையில் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் முகமாக இந்தியாவிலிருந்து 500 மெற்றிக் தொன் கோழி இறைச்சி, 50 மில்லியன் கோழி முட்டைகள் மற்றும் 40 இலட்சம் தேங்காய்கள் என்பவற்றை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.
இதனையடுத்து ஒரு கிலோ கோழி இறைச்சியை 350 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டுமென கூட்டுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதேவேளை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை இவ் வாரம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
பண்டிகை காலத்தில் மக்களின் தேவை யைப்பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய கோப்சிற்றி, லங்கா சதோச, சதோச நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கூட்டுறவு வர்த்தகத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் நிபுன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- அரிசி, தேங்காய், சீனி, பெரிய வெங்காயம், கோழி இறைச்சி உள்ளிட்ட பொருட்களை ஆசிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்ய அமைச்சு தீர்மானிக்கிறது. இதன் முதற்கட்டமாவே கோழி இறைச்சி, முட்டை, தேங்காய் (40 இலட்சம்) என்பவற்றை இறக்குமதி செய்ய தீர்மானித்தது.
பெரிய வெங்காயத்தின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் முகமாக பாகிஸ்தானில் இருந்து அதனை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக