20 டிசம்பர், 2010

வடக்கு, கிழக்கில் வீடமைப்பு திட்டங்கள் நிறுத்தப்படவில்லை ‘சண்டே டைம்ஸ்’ செய்தி முற்றிலும் பொய்

வடக்கு, கிழக்கில் தொண்டர் நிறுவனங் களின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டிடங்களின் நிர்மாண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமாகுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஆனால், தீர்மானத்தின்படி தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய கட்டடத்திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சின் சார்பில் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது:

‘வடக்கு மற்றும் கிழக் கில் தொண்டர் நிறு வனங்களின் நிதி உதவியில் மேற் கொள்ளப்படும் புதிய கட்டடங்களின் நிர்மாண வேலை களை பசில் நிறுத்தியுள்ளார்’ என்ற தலைப்பில் நேற்று (19) ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் தவறானதும் திசை திருப்புவதுமாகும்.

அத்துடன் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜெய்க்கா ஆகியவற்றுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முற்றிலும் தவறான செய்தியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் புதிய வீடமைப்பு திட்டங்களை நிறுத்த அல்லது அவற்றை குறைக்கும் எண்ணம் இருக்கவில்லை. இதன் காரணமாக அவற்றைப் பற்றி அமைச்சு விடுத்திருந்த சுற்று நிருபத்தில் வீடுகளைப் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.

எனவே, உலக வங்கியிடம் கடன் பெற்று இலங்கை அரசாங்கம் உருவாக்கி வரும் வீடுகளை அமைக்கும் திட்டமும் இந்திய அரசாங் கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 ஆயிரம் புதிய வீடுகளை அமைக்கும் மற்றும் 45 ஆயிரம் வீடுகளை திருத்தும் திட்டமும் இதில் ஏற்புடையதாகாது.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பெரும்பாலான புனரமைப்பு மற்றும் புனர்நிர்மாண திட்டங்கள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்கா ஆகிய நிதி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்று அதன் மூலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுபவையாகும்.

இவை நன்கொடையாக வழங்கப்படுபவை அல்ல. அந்தக் கடன்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியவை, எனவே, அந்த நிதி இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்கேற்ற வகையில் முறையாக பயன்படுத்தப் படுகிறதா என்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்தாக வேண்டும்.

இந்த நிதி மிகவும் தேவைப்படும் உட்கட்டமைப்புகளுக்காக, குறிப்பாக இரணைமடு, அகத்திமுறிப்பு, அக்கரா யன்குளம் போன்ற பாரிய நீர்ப்பாசன குளங்கள், மாகாண மற்றும் கிராமப்புற வீதிகள், மின்சார விநியோகம், நீர் வழங் கல் திட்டங்கள், சேதமுற்ற பாடசாலைகளின் புனர்நிர்மாணம், ஆஸ்பத்திரிகள், கூட்டுறவு சங்க கட்டடங்கள், பசளை மற்றும் நெற் களஞ்சியங்கள் ஆகியவற்றுடன் விவசாயம், கால்நடை, மீன்பிடி மற்றும் குடிசைக் கைத்தொழில்களை சமூக மட்டத்தில் வாழ்வாதார திட்டங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.

வடக்கில் தற்போது பல நூற்றுக்கணக் கான கட்டடங்கள் ஓரளவு சேதமுற்ற நிலையில் உள்ளன. வடக்கில் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்த இந்த கட்ட டங்களை திருத்த வேண்டியது அவசிய மானவையாகும். எனினும், சில சந்தர்ப் பங்களில் சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்காது புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

எனவே, வடக்கில் மற்றும் கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர்நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால் மேற்படி தீர்மானத்தின் காரணமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டட திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக