20 டிசம்பர், 2010

ஐரோப்பிய பாராளுமன்றம் புலி ஆதரவாளரின் களம் : அரசாங்கம்
இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு அப்பாராளுமன்றம் அனுமதியளிக்கிறது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க் ஆகியற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியவன்ஸ இது தொடர்பாக கூறுகையில் கடந்த வாரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக பரிமாறப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை பதிலளிப்பதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

"அவ்வேளையில் தலைமை தாங்கிய அதிகாரி இந்த நிராகரிப்பை மேற்கொண்டதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான உப குழு இலங்கை விவகாரத்தில் நியாயமான சமத்துவமான கலந்துரையாடலை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை அத்துடன் எல்.ரி.ரி.ஈ. (LTTE)ஆதரவாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு இப்பாராளுமன்றம் அனுமதியளிக்கிறது என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது' என அவர் கூறியுள்ளார்.

மேற்படி மனித உரிமைகள் உபகுழுவின் தலைவி ஹெய்டி ஹெதாலாவுக்கு இலங்கைத் தூதுவர் ஆரியவன்ஸ அனுப்பியுள்ள கடிதமொன்றில் 'டிசெம்பர் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு மணித்தியால கலந்துரையாடல் நடத்தப்பட்டது. உபகுழுவிலுள்ள 32 எம்.பிக்களில் ஒருவர் மாத்திரமே பேசினார். ஐரோப்பிய ஆணைக்குழுவினால் ஒருசில கருத்துகள் தெரிவிக்கப்பட்டதைத் தவிர பெரும்பாலான நேரம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன' என சுட்டிக்காட்டிள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக