25 செப்டம்பர், 2010


இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் எந்த பயங்கரவாத இயக்கமோ அல்லது ஆயுதக் குழுக்களோ இங்கில்லை. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன.

ஊடகங்கள் செய்திகளில் உண்மைத் தன்மையை எழுத வேண்டும். இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலா ளர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரை யாடலில் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களை இயக்க ரீதியாக பிரித்து காட்டுவதற்கு ஒரு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன.

இதற்கெதிராக முஸ்லிம் சகோதரர்கள் துணைபோகக் கூடாது. முஸ்லிம்கள் கலிமாவின் அடிப்படையில் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஒன்றுபடல் வேண்டும். இயக்கங்கள் கூறுகளாக பிரியக்கூடாது.

இதற்கு பின்னால் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உள்ளன. நாம் விழிப்புடன் செயற்படல் வேண்டும்.

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கூட இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென தெரி வித்துள்ளார் என அலவி மெளலானா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக