தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க 2002 ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதியுடன் ஓய்வு பெற வேண்டும். ஆனால் 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழு காரணமாக அவருக்கு சேவையில் இருந்து விலக முடியாதுள்ளது. இதனால் அவரது மனித உரிமை மீறப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன கூறினார்.
ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜெயசேகர எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆணையாளரின் தற்போதைய மாதச் சம்பளம் 73,165 ரூபாவாகும். அவர் 2002ல் ஓய்வு பெற்றார். ஆனால் 2002 ஜனவரி 29 முதல் தேர்தல் ஆணையாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட தேர்தல் ஆணைக் குழு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற சபை நிறுவப்பட்ட பின் தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக